Show all

இந்திய வரலாறு

தற்போது நடப்பது தமிழ்த் தொடர் ஆண்டு 5119.

5119 ஆண்டுகளுக்கும் பஞ்சாங்கக் கணக்கு இருக்கிறது.

இன்றளவும் நமக்குக் கிடைக்கிற தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இந்த 5119 ஆண்டுகளில் தோன்றியது. 5119 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இலக்கியங்கள் கைவசம் இல்லை.

5119 ஆண்டுகளுக்கு முன் தமிழரே இந்தியா முழுவதும் வாழ்ந்து வந்தனர்.

“தென்குமரி வடபெருங்கல்

குணக் குட கடலா எல்லை

குன்று மலை காடு நாடு

ஒன்றுபட்டு வழிமொழிய. (புறநானூறு 17வது பாடல்)

“வடாஅது பனிபடு

நெடுவரை வடக்கும்

தெனாஅது உருகெழு

குமரியின் தெற்கும்

குணாஅது கரைபொரு

தொடுகடல் குணக்கும்

குடாஅது தொன்றுமுதிர்

பௌவத்தின் குடக்கும் (புறநானூறு 6வது பாடல்)

புறநானூற்றுப் பாடல்கள்- தமிழர் எல்லைகளாக இன்றைக்கு இருக்கிற முழு இந்தியாவைக் குறிப்பிடுகிறது.

தமிழ் தொடர் ஆண்டு 1900 (கிமு 1200) வாக்கில் நடு ஆசியாவிலிருந்து ஆரியர்கள் இமயமலைக் கணவாய் வழியாக இந்தியாவின் வடக்குப் பகுதியில் குடியேறி வேதகால நாகரீகத்தைத் தொடங்கினார்கள்.

ஆரியர்கள் இந்தியாவில் நுழைவதற்கு முன்னம் வரை தமிழர்களே ஆசியா, ஐரோப்பா, ஆப்பரிக்கா ஆகிய மூன்று கண்;டங்களில் தரை வழியாகவும், கடல் வழியாகவும் வணிகம் செய்து வந்தனர். அந்தக் காலக்கட்டங்களில், தமிழர்கள் இந்தியாவை நாவலந்தேயம் என்று அழைத்தனர்.

தமிழர்கள் வணிகம் புரிந்த பகுதி மக்களுக்கு நாவலந்தேயத்தைக் காண வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அவர்கள் நாவலந்தேயத்தை ந்தேயா இந்தியா என்று அழைத்தனர்.

உலகினரும், தமிழர்களாகிய நாம் மட்டுமே நமது நாட்டை இன்று இந்தியா என்று அழைக்கிறோம். இந்தியாவில் மீதி அனைவரும் பாரத் என்றே அழைக்கிறார்கள்.

ஆரியர்கள் வேதகாலத்தில், நாவலந்தேயத்தில்; தாங்கள் புழங்கிய  பகுதியை பாரத் என்று அழைத்தார்கள்;. அவர்கள் பாரத் என்று அழைத்த பகுதியில் திருப்பதிக்கு தெற்கே இருக்கிற பகுதிகள் வராது.

ஐரோப்பியர் வரவுக்குப் பிறகே திருப்பதிக்குத் தெற்குப் பகுதியும் இந்தியாவிற்குள் உள்ளடக்கப் பட்டது.

இந்தியாவில் முழுப்பகுதியும் இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழர் தவிர இந்தியாவில் மீதி அனைவரும் பாரத் என்று அழைக்கிறார்கள்.

மொகஞ்சதாரோ, ஹரப்பா, அரிக்காமேடு, கீழடி நகர நாகரிகங்கள் அனைத்தும் நாவலந்தேயத்தில் எந்த அயலவரும் நுழைவதற்கு முந்தைய தமிழர் நாகரீகங்களே.

ஆரியர் வரவுக்குப் பிறகு நாவலந்தேயம் என்றழைப்பதை தமிழர் நிறுத்தி விட்டனர். செந்தமிழ் புழங்கிய  பகுதியை செந்தமிழ் நாடு என்றும், வடமொழிக் கலப்பால் உருவான திசை மொழி புழங்கிய  பகுதிகளை கொடுந்தமிழ் நாடு என்றும் அழைத்தனர்.

செந்தமிழ் நாட்டு எல்லை காலத்திற்கு காலம் குறுகிக் கொண்டே வந்தது. நாவலந்தேயத்தில் ஆரியர் குடியேறிய பாரத் பகுதியும், கொடுந்தமிழ் நாட்டுப் பகுதியும் விரிந்து கொண்டே சென்றன.

தமிழ் தொடர்ஆண்டு 4859ல் ஐரோப்பியர் தாங்கள் இந்தியா என்று அறிந்திருந்த நாவலந்தோயத்தை தேடி வந்த போது அவர்கள் உயர்வாக மதித்து வந்த நாவலந்தேயம் இல்லை. அவர்களே இந்தியாவை ஒருங்கிணைத்தார்கள்.

விரிவடைந்து கொண்டே வந்த ஆரியர் குடியேறிய பாரத் பகுதி, கொடுந்தமிழ் நாட்டுப் பகுதிகளின் வரலாறு.

கி.மு 600 - சமண, பௌத்த தோற்றம்

கி.மு 600 - பாரசீகர் படையெடுப்பு (இந்திய வடமேற்கு பாரசீக அரசுடன் இணைப்பு)

கி.மு 326 - கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் படையெடுப்பு (இந்திய வடக்கு நிலப்பகுதி வீழ்ச்சி)

கி.மு 323 - 185 மௌரியப் பேரரசு

கி.மு 323 - கி.மு 301 மௌரிய பேரரசன் - சந்திரகுப்தர் ஆட்சி

கி.மு 301 - கி.மு 273 மௌரிய பேரரசன் - பிந்துசாரன் ஆட்சி

கி.மு 268 - கி.மு 233 மௌரிய பேரரசன் - அசோகன் ஆட்சி

கி.மு 236 - கி.மு 185 பிற்கால மௌரியர் (தசரதன், குணாளன், மகேந்திரன், ஜலவுகன், பிருகத்ரதன்)

கி.மு 185 - கி.மு 75 சுங்கர் ஆட்சி

15 - 176 குஷாணர்கள் ஆட்சி

கி.பி 15 - கி.பி 65 குஷாண பேரரசன் - முதலாம் கத்பீசஸ்

கி.பி 65 - கி.பி 75 குஷாண பேரரசன் - இரண்டாம் கத்பீசஸ்

கி.பி 78 - கி.பி 120 குஷாண பேரரசன் - கனிஷ்கன்

கி.பி 120 - கி.பி 138 குஷாண பேரரசன் - அவிசேகன்

கி.பி 138 - கி.பி 152 குஷாண பேரரசன் - ??

கி.பி 152 - கி.பி 177 குஷாண பேரரசன் - வாசுதேவன்

319 - 540 குப்தப் பேரரசு (சமுத்திரகுப்தர் முக்கிய மன்னர்)

606 - 647 ஹர்ஷர் ஆட்சி

712 - 1526 முஸ்லீம் படையெடுப்பு, ஆட்சி (வடக்கு)

1502 - 1857 முகலாயர் ஆட்சி

இந்த ஆட்சிகள் எல்லாம் பாரத் என அழைக்கப் பட்ட வடஇந்தியப் பகுதி வரலாறு.

முகமதியர்கள்- வடஇந்தியாவில் சமணம், பௌத்தம் தவிர்த்த வடஇந்திய மதக்கோட்பாடுகளுக்கு ஹிந்து எனப் பெயரிட்டர்கள். ஹிந்து மத மக்களால் அந்தக் கால கட்டத்தில் பேசப்பட்ட மொழியை ஹிந்தி என்று அழைத்தார்கள்.

ஹிந்து மதத்திற்கும் ஹிந்தி மொழிக்கும் பெயரிட்டவர்கள் முகமதியர்களே.

வேதகால மக்களால் பேசப் பட்ட மொழிகள் பாலி, பிரகிருதம், சம்ஸ்கிருத மொழிகளே.

தமிழ், பிராகிருதம், சமற்கிருதம், உருது, பாரசீகம், அராபியம் ஆகியவைகளின் கலவை மொழிதான் மகமதியரால் பெயர் சூட்டப்பட்ட கடிபோலி ஹிந்தி.

1757 - 1947 இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி

15 ஆகஸ்டு 1947 - இந்தியா விடுதலை நாள்

1947 இந்தியா, பாகிஸ்தான் உருவாக்கம்.

தமிழர்களுடைய இறையியல் கோட்பாடுகள், விழாக்கள் என்பன வேறு.

தமிழர் அல்லாத இந்திய மக்களின் மதம்: ஹிந்து.

விழாக்கள்: வேதங்கள், புராண, இதிகாசங்களில் குறிக்கப் பட்ட பண்டிகைகள்.

அப்படிப் பட்ட ஒரு பண்டிகைதான் தீபாவளி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.