இந்தியா - சீனா இடையேயான சிக்கீம் எல்லை பிரச்னையில்
இதே நிலை தொடர்ந்தால் போர் தான் தீர்வாக அமையும் என சீனா எச்சரித்து வருகிறது. இந்தியா
- சீனா இடையே சிக்கீம் பகுதியில் எல்லை பிரச்னை நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக
இப்பிரச்னை தீவிரமாகி வருகிறது. இந்நிலையில்
டோக்லாம் பகுதியில் தொடர்ந்து 3 வது வாரமாக இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் சீனாவில் உள்ள ஊடகம் ஒன்று, இந்தியா - சீனா பிரச்னை சரியாக கையாளப்படவில்லை
என்றால் இரு நாட்டிற்கும் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உள்ளது என தெரிவித்துள்ளது.
சீனாவைச்
சேர்ந்த அந்நாட்டு ராணுவ ஆலோசகரான, சமூக அறிவியல் ஆராய்ச்சி மாணவர் கூறுகையில், இந்தியா - சீனா இடையே நிலவும் பிரச்னையை வரலாறு
சார்ந்த பாடங்கள் மூலம் இந்தியாவிற்கு விளக்க அமைதியாக பிரச்னையை தீர்க்க முயற்சிக்கிறது.
ஆனால் இந்தியா அதை கேட்க மறுக்கிறது என்றும், அமெரிக்காவிடம் தனக்கும் சீனாவிற்கும் விரோத போக்கு
இருப்பதாக காட்டிகொள்ளவே இந்தியா இது போல் நடந்து கொள்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர்
ஓபாமா இந்தியாவிற்கு சிறந்த மதிப்பளித்தார். ஆனால் தற்போதைய அதிபர் டிரம்ப் இந்தியா
மீது அதே மதிப்பாளிப்பார் என்று கூற முடியாது. இதே
நிலை தொடர்ந்தால் சீனா ராணுவ நடவடிக்கை மூலம் போர் நடத்தி தான் தீர்வு காண வேண்டிய
சூழ்நிலை ஏற்படும். பிஜிங்கை விட புதுடில்லி பலவீனமானது. என எச்சரித்துள்ளார். உண்மையில்
இது இருநாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சனையா ஆளும் வர்க்கங்களின் அரசியல் பிரச்சனையா
என்று தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.