ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராத் கோஹ்லி 92 ரன்களும், ரஹானே 55 ரன்களும் எடுத்தனர். 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவரில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 2-0 என்று முன்னிலை வகிக்கின்றது. 33-வது ஓவரை குல்தீப் யாதவ் தொடர்ச்சியாக வடே, அகர் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர்களின் விக்கெட்டுகை எடுத்து ஹாட்ரிக் சாதனைப் படைத்தார். இந்தியா சார்பில் கொல்கத்தா மைதானத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் 3-வது வீரர் இவராவார். இதற்கு முன் கபில்தேவ், சேத்தன் சர்மா ஆகியோர் ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.