ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டி தண்டனை கொடுக்கப் பட்டுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள இவரது மனைவி நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேலூர் சிறையில் கடந்த 26 ஆண்டுகளாக தண்டனையை அனுபவித்து வரும் முருகன், சிறைத் துறைக்கு இரு நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தான் உயிருடன் சமாதி அடைய விரும்புவதாகவும் இதற்காக உணவு உட்கொள்ளாமல் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதற்கு சிறை நிர்வாகத் தரப்பில் இருந்து உரிய பதில் கிடைக்காததால் சாப்பிடாமல் உள்ளார். சிறை வாழ்க்கை வெறுத்ததால் முருகன் இந்த முடிவுக்கு வந்துள்ளார். மகளின் திருமணத்துக்காக 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி நளினி மனு அளித்திருந்தார். அதன் மீதும் சிறை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், தாங்கள் விடுதலை செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் இருவரும் உள்ளனர்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.