Show all

வெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்

வெயில் காலத்தில்   குழந்தைகள் முதல் முதியோர் வரை முக்கியமாக வர கூடிய ஒன்று வேர்க்குரு ( Prickly Heat) பிரச்னைகள்தான். கோடைக் காலத்தில் நம் உடலில் இருந்து, அதிகமாகத் தண்ணீர் வெளியேறிவிடுகிறது. இதற்குக் காரணம் வியர்வை. இதைச் சமன்செய்ய, தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி ஒரு மனிதருக்குத் தேவையான தண்ணீரின் அளவு  1.5 முதல் 2 .5 லிட்டர் ஆகும். இதையே வெயில் காலத்தில் இரண்டு மடங்காக்கி குடிக்க வேண்டும். இல்லையெனில் வேர்க்குரு பிரச்னைகள் வரக்கூடும்.

வெயில் காலத்தில் வரும் வேர்க்குரை சமாளிக்க சில  இயற்கை வழிகள் :  

  • வேர்க்குரு உள்ள  இடத்தில் நுங்கு நீரைத் தடவினால் கட்டிகள் மறைந்துவிடும்.
  • வெயில் காலத்தில் குழந்தையை இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பாட்ட வேண்டும்.
  • வெயில் காலத்தில் அதிகளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.
  • பச்சையி பயிறு, கடலைப்பருப்பு, கஸ்தூரி மஞ்சள் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும். 
  • வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேர்த்துத் தடவலாம். கிருமி நாசினியாக இருக்கும் மஞ்சளை பயன்படுத்தினால் கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும்.
  • உடல் சூடு அதிகம் ஆகாமல் இருக்க, இறுக்கமான ஆடைகள் மற்றும்  கருப்பு நிற ஆடை அணிவதைத் தவிர்க்க வேண்டும். பருத்தி ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும். 
  • வெள்ளரிக்காய், கிர்ணி, இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றைப் பருகலாம். இவை உடலின் நீரிழப்பைச் சரிசெய்யும். வியர்க்குருவைப் போக்க உதவும்.
  • கற்றாழையினை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்சனை நீங்கும்.இவையலாம் பயன்படுத்தி வெயிலில் வரும் வேர்க்குரை சமாளிக்கலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.