Show all

நீண்ட அடர்த்தியான கருமையான கூந்தல் வேண்டுமா?

நீண்ட அடர்த்தியான கருமையான கூந்தல் வேண்டுமா? இன்றிலிருந்து செயற்கை முறையில் தயாரிக்கப்படும் எந்த ஒரு ஷாம்பு போன்ற பொருட்களையும் தலைக்குப் பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் முடிக்கு வளர்முகந்தான்.

ஒரு செய்தியை ஒப்புமை படுத்திப் பாருங்கள். இந்த ஷாம்புகளைக் கண்டுபிடிக்கும் முன்னர் எல்லாம் என்ன பயன் படுத்தினார்கள்? அப்போது முடிகெட்டுதல் பிரச்சனை அதிகமாக இருந்ததா? இதையெல்லாம் கேட்டுப் பார்த்தோமானால் அந்தப் பழைய பராமரிப்பு முறைகளை யெல்லாம் பின்பற்றத் தெடங்கிவிடுவோம்.

    சீயக்காய் அரப்பு செம்பருத்தி இலை வெந்தயம் இவற்றையெல்லாம் விட ஷாம்பு எந்த வகையிலும் தலைக்குப் பாதுகாப்பானதல்ல.

சீயக்காய் பொடியுடன் உலர்ந்த எலுமிச்சம் பழத்தோல் வெந்தயம் பசசைப்பயறு காயவைத்த செம்பருத்தி இலை இவைகளைக் கொஞ்சம் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள்   .

இதைத் தலைக்கு உபயோகித்தால் தலைமுடி நன்கு செழுமை அடைவதுடன் நன்கு கருமையாகவும் இருந்து வரும்.

இன்றைக்கு நாம் பயன் படுத்தும் அவ்வளவு பொருட்களிலும் இரசாயனங்கள் கலந்திருக்கிறது நமக்கெல்லாம் தெரிந்த உண்மை.

அதனால் உடலை அழகைப் பராமரிப்பதில் இந்த இரசாயன தீமைகளையெல்லாம் கடந்து செய்கிற அளவிற்கு இவையெலாம் கடுமையான வேலையாகத் தெரியலாம். ஆனாலும் செய்யப்பட வேண்டிய ஒன்று. பொருளாதார வேலைகளுக்காக சிரத்தை எடுத்துக் கொள்கிற நாம் மனது இனிமை தருகின்ற உடல் ஆரோக்கியம் அழகு என்பவற்றுக்கு கொஞ்சம்  சிரத்;தை எடுத்துக் கொள்வதில் எந்தவொரு தவறும் இல்லை.

உங்கள் தலைமுடியை வாரிக்கொள்ள தனியாக சீப்பு வைத்துக் கொள்ளுங்கள். அதில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தலையில் சிறிது அழுக்கு சேர்ந்தாலும் பொடுகு வரத்தொடங்கிவிடும். முன்சொன்ன சீயக்காய் கலவை முற்றிலும் பொடுகை கலைந்து விடும்.

தலைக்கு எண்ணெய் தடவும் போது விரல் முடியின் வேர்க்கால்களை மெல்லிய அழுத்தத்துடன் மெல்ல வாருங்கள். இது வேர்பகுதிக்கு புத்துணர்வைப் பிறப்பிக்

கும். முடியின் நுனிப் பகுதிகளையும் நன்கு கசக்கி எண்ணெய் பூசுங்கள். அவ்வப்போது நுனிப் பகுதி வெடித்து விட்டால் அந்தப் பகுதியை வெட்டி விடுங்கள்.

கறிவேப்பிலை மருதாணி இவைகளை அரைத்து அடைதட்டிக் கொள்ளுங்கள். பின்பு அதனை சுத்தமான தேங்காய் எணணெய்யில் ஊறவிடுங்கள். இப்போது அதை தேய்த்து வாருங்கள். இதற்கு மேலும் சிறந்த தைலம் உங்களுக்குக் கிடைக்கப் பெறாது. அந்தளவுக்கு அதன் பயனிருக்கும்.

கறிவேப்பிலையில் இரும்புச் சத்து மிகுதி. அதனால் அதை அடிக்கடி உணவில் துவையலாகச் சேரத்து வரலாம். பீட்ரூட் தக்காளி சுண்டைக்காய் இவையெல்லாம் தலைமுடிக்கு உகந்தது. இவற்றை அதிகம் உணவில் சேர;த்துக் கொள்ளுங்கள். திராட்சை ஆப்பிள் மாம்பழம் கூட இதுபோலத்தான். இவற்றில் பகுதியேனும் உங்களால் நிச்சயம் பின்பற்ற முடியும். பின்பற்றுங்கள். ஒன்றை நினைவில் வைக்கவும். மனிதனுக்கு பயனற்ற எந்தப் பொருளும் அடுத்தடுத்த சந்ததிகளில் இல்லாமல் போய்விடுமாம். முடியும் அந்த வகைதான். இன்னும் சில நூற்றாண்டுகளில் தலையில் யாருக்குமே முடியிருக்காதாம். தவிர இன்று முடிதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிய கவர்ச்சி சாதனம். இதில் எள்ளளவும் சந்தேகிக்க வேண்டாம். முடியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.