Show all

அமெரிக்காவிற்கும் தாவல்! சீனாவில் 9 பேர்களைப் பலி கொண்டுள்ள, புதியதாகப் பரவிவரும், கொரோனா நுண்ணுயிரி தாக்குதல் நோய்.

சீனாவில் ஒன்பது பேர்களைப் பலி கொண்டுள்ளது புதியதாகப் பரவிவரும், கொரோனா நுண்ணுயிரி தாக்குதல் நோய்- தற்போது அமெரிக்காவிலும் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

08,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் 9 பேர்களைப் பலி கொண்டுள்ளது புதியதாகப் பரவிவரும், கொரோனா நுண்ணுயிரி தாக்குதல் நோய். இந்த நிலையில், தற்போது அமெரிக்காவிலும் கொரோனா நுண்ணுயிரி பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் யுகான் நகரில் நிமோனியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொரோனா நுண்ணுயிரி மக்களிடம் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 291 பேருக்கு இந்தக் கொரோனா நுண்ணுயிரி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 54 பேர் இந்த கொரோனா நுண்ணுயிரி தொற்றிற்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா நுண்ணுயிரி தாக்குதல் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா நுண்ணுயிரி பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் யுகானில் இருந்து வாசிங்டன் வந்த ஒருவருக்கு இந்த கொரோனா நுண்ணுயிரி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எவரெட் பகுதியில் உள்ள மருத்துவ மையத்தில் அவர் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த கொரோனா நுண்ணுயிரி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக் கூடியது என்பதால் அமெரிக்காவில் வேறு யாருக்காவது இந்த கொரோனா நுண்ணுயிரி தொற்று உள்ளதா என கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.