Show all

முதன் முறையாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சீன மொழியில் வரவேற்றார் அமெ

நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபையின் 70-வது கூட்டம், கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐ.நா. சபையில் இன்று பொதுச்செயலாளர் பான் கி மூன் ஏற்பாடு செய்துள்ள, ‘நிலையான வளர்ச்சி’ என்ற தலைப்பில் நடக்கும் மாநாட்டில் உலக தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு 21 குண்டுகள் முழங்க வரவேற்ப்பு அளிக்கபட்டது. பிறகு அவர் வாஷிங்டன் நகரில் உள்ள வௌ;ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேசினார். அப்போது ஒபாமா, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சீன மொழியில் ‘நீ ஹொ’ (ஹலோ) என்று கூறி வரவேற்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.