Show all

அமெரிக்க தொழிலதிபர்களை இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் நரேந்திர மோடி...

இந்தியாவில் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து அமெரிக்க தொழிலதிபர்களை இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் நியூஸ் கார்ப் நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டாக் ஏற்பாடு செய்துள்ள ஊடக, தகவல் தொடர்புத்துறை நிறுவன அதிபர்களின் சந்திப்பில் மோடி பங்கேற்றார். அதில் பேசிய அவர் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான தருணம் இது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் முதலீடு செய்ய சரியான நேரம் இது. என்று கூறினார்.

மேலும் எளிமை படுத்தப்பட்ட நடவடிக்கைகள், வேகமான முடிவெடுக்கும் திறன். வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்பேற்றுக் கொள்ளுதல், ஆகியவற்றின் அவசியம் உணர்ந்து நாட்டின் சீர்திருத்ததிற்கே நான் முன்னுரிமை கொடுத்து வருகிறேன். வெளிநாடுகளில் நேரடி முதலீடு என்பது உலகம் முழுவதும் குறைந்து விட்டது. ஆனால் இந்தியாவில் அது 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இது இந்த இந்திய பொருளாதாரத்தில் நம்பிக்கை பிரதிபலிக்கிறது. என்று கூறினார்.

நியூயார்க் பயணத்தை முடித்துக் கொண்டு, கலிபோர்னியா செல்லும் மோடி, அங்கு 26, 27 ஆகிய தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவற்றில் சிலிகான் வேலி எனப்படும் அமெரிக்க சாஃப்ட்வேர் நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதியில் தொழிலதிபர்களுடனான சந்திப்பும் அடங்கும்.

மேலும், முகநூல் நிறுவன அதிபர் மார்க் ஸக்கர்பர்க், ஆப்பிள் நிறுவன அதிபர் டிம் குக், கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோரையும் மோடி சந்தித்துப் பேசவிருக்கிறார். கலிஃபோர்னியாவில் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு மோடி, வரும் 28ஆம் தேதி நியூயார்க் திரும்புகிறார். அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்தித்துப் பேசுகிறார்.

மேலும், ஐ.நா. சபையில் அமைதிகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதோடு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விரைவாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் உரையாற்ற உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.