Show all

இன்ப அதிர்ச்சி கொடுக்கும் முயற்சிக்கு ஆயிரத்து முன்னூறு கோடி கூடுதல் செலவு!

தன் மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணிய நபருக்கு, ஒன்று வாங்கினால் ஒன்று இலவயம் என்கிற இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர் விமான உற்பத்தி நிறுவனத்தினர். மகனுக்கு இன்ப அதிர்ச்சியாக விமானத்தைக் கொடுக்க நினைப்பவர் சாதாரண பணக்காரராகவா இருப்பார்! சரி போனால் போகட்டும் என்று, அந்த இரண்டு விமானங்களையும் வாங்கியுள்ளார். 

11,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தி முதலீட்டாளராக உள்ள ஒருவர், தனது மகனுக்கு பிறந்தநாள் பரிசாக ஏர்பஸ் விமானம் ஒன்றை வழங்க முடிவெடுத்துள்ளார். இன்பஅதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக யாருக்கும் சொல்லாமல் அவரே ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திற்கு பேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

விமான உற்பத்தி நிறுவன அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசியுள்ளனர். அரைகுறையாக ஆங்கிலம் தெரிந்த அவர், ஏதோ பேசி சமாளித்து விமானத்திற்கு கேட்பு அளித்துள்ளார். அவர்கள் விமானத்தின் விலை 2600 கோடி ரூபாய் என கூறியுள்ளனர். அவருக்கு கொஞ்சம் விமானத்தின் விலை அதிகமாக இருப்பது போல தோன்றியிருக்கிறது. ஒருவேளை கூடுதல் வசதியுள்ள சிறப்பு மாதிரி விமானமாக இருக்கக் கூடும் என்று அவரே முடிவு செய்து கொண்டுள்ளார்.

இரண்டு மாதங்கள் கழித்து தனது மகன் பிறந்தநாள் வரும் நேரத்தில் விமான உற்பத்தி நிறுவனத்திற்கு பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பேசிய விமான உற்பத்தி நிலைய அதிகாரிகள், நீங்கள் கேட்ட 2 விமானங்கள் தயார் நிலையில் உள்ளன. எப்போது வாங்கிக்கொள்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். 

தன் மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணிய நபருக்கு, ஒன்று வாங்கினால் ஒன்று இலவயம் என்கிற இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர் விமான உற்பத்தி நிறுவனத்தினர். மகனுக்கு இன்ப அதிர்ச்சியாக விமானத்தைக் கொடுக்க நினைப்பவர் சாதாரண பணக்காரராகவா இருப்பார்! சரி போனால் போகட்டும் என்று, அந்த இரண்டு விமானங்களையும் வாங்கியுள்ளார். 

அதில் ஒன்றை தனது மகனுக்கும் மற்றொன்றை தனது உறவினர்களுக்கும் பரிசாக அவர் வழங்கியுள்ளார். 

இது பற்றி விமானத்தை வாங்க, கேட்பு அளித்த நபர் தெரிவிக்கையில், விமான நிறுவனப் பணியாளர்கள் என்னிடம் விமானத்தின் உள்புற அமைப்பு மற்றும் வெளிப்புற அமைப்பு குறித்து  பல கேள்விகளை கேட்டனர். எனக்கு ஆங்கிலம் புரியாத காரணத்தால் ஏதோ ஒருவகையில் சமாளித்து விட்டேன்.

இறுதியில் பணத்தை செலுத்தக் கூறினர். கட்டணம் அதிகமாக இருந்தாலும், அந்தத் தொகைக்கு ஏற்றார் போல செய்வார்கள் என்று நினைத்திருந்தேன். அனால் கேட்பு நிறைவு செய்யப்பட்டு விட்டதாவென கேட்கும் போதுதான் அவர்கள் இரண்டு விமானத்திற்கு கேட்பு பதிவு செய்து கொண்டு, 2600கோடி கேட்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது என்கிறார்.

ஏர்பஸ் விமான உற்பத்தி நிறுவன வாடிக்கையாளர் சேவையில், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், அரபுக்கு எண் இரண்டை அழுத்தவும் என்பதான விருப்பத்தேர்வு வாய்ப்பு இல்லை போலிருக்கிறது. ஆனாலும் அந்தப் பணக்காரர் இந்த வேலையை தனது ஊழியர்களிடம் கொடுத்து இருந்தால் அழகாக முடித்துதான் கொடுத்திருப்பார்கள். என்ன இருந்தாலும் தன்மகனுக்கு இன்பஅதிர்ச்சி கொடுக்கப் போய், தனக்கு இன்ப அதிர்ச்சி கிடைத்த அனுபவம் எல்லாம் எளிதாகக் கிடைக்குமா என்ன?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,258.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.