Show all

எந்த நாட்டுக் குடிமக்களை நிறைய நாடுகள் எளிமையாக அனுமதிக்கின்றன! தரவரிசையில் இந்தியக் குடிமக்களுக்கு எத்தனையாவது இடம்

10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜப்பான்- தனது குடிமக்களை, அதிக நாடுகள் பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்கும் வகையாக தங்கள் நாட்டுக் கடவுச்சீட்டை, அதிக நாடுகள் அங்கிகரிக்கும் வகையில் வலிமை படுத்தியிருக்கிறது. அந்த வகைக்கு முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை சிங்கப்பூர் தக்க வைத்திருந்த முதல் இடத்தை இப்போது ஜப்பான் பிடித்திருக்கிறது.

ஹென்லே இன்டக்ஸ் என்ற நிறுவனம், ஆண்டுதோறும் எந்த நாட்டின் கடவுச்சீட்டு மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற கணக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நுழைவு அனுமதி இல்லாமல் பிற நாடுகள் வரவேற்கும் அனுமதியை வழங்குவதின் அடிப்படையில் இந்த தர வரிசை தயார் செய்யப்படுகிறது.

உலகின் சக்தி வாந்த கடவுச்சீட்டு பட்டியலில் இந்தியாவிற்கு 81வது இடம் கிடைத்துள்ளது. இந்திய கடவுச்சீட்டு மூலம் 60 நாடுகளுக்கு இலவச நுழைவு அனுமதி சேவையில் பயணம் செய்ய முடியும். 

பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 104வது இடத்தில் உள்ளது. 33 நாடுகளுக்குப் பாகிஸ்தான் கடவுச்சீட்டு மூலம் நுழைவு அனுமதி இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

ஜப்பான் நாட்டு குடிமக்களை உலகில் 190 நாடுகள் நுழைவு அனுமதி இல்லா பயணத்தை அங்கீகரித்துள்ளது. சிங்கப்பூர் 2வது இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் நாட்டு குடிமக்களை உலகில் 190 நாடுகள் நுழைவு அனுமதி இல்லா பயணத்தை அங்கீகரித்துள்ளது. 

3வது இடத்தில் ஜெர்மனி பிரான்ஸ், தென் கொரியா 4ஆம் இடத்தில் டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, 5ஆம் இடத்தில் லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரியா, போர்சுகல், லக்ஸம்பர்க், நெதர்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் இருக்கின்றனர்.

பெல்ஜியம், கனடா, அயர்லாந்து, ஸ்விட்சர்லாந்து கடவுச்சீட்டுகள் மூலம் 185 நாடுகளுக்கு நேரடியாகச் சென்று நுழைவு அனுமதி பெற முடியும். 

ஆஸ்திரேலியா, கிரீஸ் மற்றும் மால்டா உள்ளிட்ட கடவுச்சீட்டு மூலம் 183 நாடுகளுக்கு நுழைவு அனுமதி இல்லாமல் பயணிக்கலாம்.

செக் குடியரசு மற்றும் நியூசிலாந்து கடவுச்சீட்டுகள் மூலம் 182 நாடுகளுக்கு நுழைவு அனுமதி இல்லாமல் பயணம் செய்யலாம். ஐஸ்லாந்து கடவுச்சீட்டு மூலமாக 181 நாடுகளுக்கு இலவச நுழைவு அனுமதி மூலம் பயணம் செய்ய முடியும். ஹங்கேரி, மலேசியா, ஸ்லோவேனியா நாடுகளின் கடவுச்சீட்டுகள் மூலம் 180 நாடுகளுக்கு நேரடியாக அங்குச் சென்று நுழைவு அனுமதி பெற்றுக்கொள்ள முடியும்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கடவுச்சீட்டு வைத்து 29 நாடுகளுக்கு பயணிக்கலாம். பாகிஸ்தான் நாட்டு கடவுச்சீட்டு மூலம் 35 நாடுகளுக்கு பயணிக்கலாம். சோமாலியா நாட்டு கடவுச்சீட்டு மூலம் 38 நாடுகளுக்கு பயணிக்கலாம். 

இலங்கை நாட்டு கடவுச்சீட்டு மூலம் 45 நாடுகளுக்கு பயணிக்கலாம் கடவுச்சீட்டு வலிமைப் பட்டியலில் 85வது இடத்தை பிடித்துள்ளது இலங்கை.

சிங்கள பேரினவாதத்தை கைவிட்டால், இலங்கையும் சிங்கப்பூர், சப்பானுக்கு இணையாக தங்கள் கடவுச்சீட்டை வலிமைப் படுத்துவதற்கு, நிறைய வாய்ப்பு இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,012.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.