Show all

சீன அதிபரால் சாத்தியமானது! தமிழகத்து வரலாற்றுப் புகழ்பாட குவிந்திருக்கும் சீன மற்றும் வட இந்திய இதழியலாளர்கள்.

வருவதோ சீன அதிபர்! புகழ் ஆற்றுப்படை குவிவதோ தமிழகத்திற்கு. முன்னணி வகிக்கும் மோடி; பரணிபாட அணி வகுக்கும் ஊடகங்கள்.

24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒன்றியத் தலைமைஅமைச்சர் நரேந்திரமோடி-சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்று மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். வரலாற்று முதன்மைத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிப்பதற்காக சீன நாட்டை சேர்ந்த ஏராளமான இதழியலாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர்.

இதுதவிர சீன நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியை சேர்ந்தவர்களும் அதிநவீன படப்பிடிப்புக் கருவிகளுடன் வந்துள்ளனர். இவர்கள் மாமல்லபுரத்தில் சீன அதிபர் பார்வையிட உள்ள இடங்களை படம் பிடித்தனர்.

இதுதவிர டெல்லியில் இருந்தும் ஏராளமான இதழியலாளர்களும் தொலைக்காட்சி நிருபர்களும், சீனாவிற்கு சளைத்தவர்களா நாங்கள் கெத்து காட்ட மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர்.

இந்த இரண்டு ஊடகப் பெருமக்கள் பாடப்போகும் பரணியில் கதைத்தலைவனாக வீற்றிருப்பது மாமல்லபுர வரலாற்றுக் கலைச் செல்வங்களோடு தமிழகம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,302.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.