குறள்: குமரிநாடன் உரை: வாலறிவன் என்று தமிழை அறிவுத்தெய்வமாக கண்ட திருவள்ளுவர், தமிழியலை அந்த அறிவுத்தெய்வத்தின் தாள் என்கிறார். தமிழியலைப் பேணதவர் எனில் கற்ற கல்வியினால் என்ன பயன் இருக்க முடியும் என்று வினவுகிறார் திருவள்ளுவர், கடவுள்கூறு தெய்வமாக தமிழை வாழ்த்தும் கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் இரண்டாவது குறளில்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
வாலறிவன் என்கிற தமிழ், காட்டும் நன்னெறிகளை (தமிழியல்), பேணாதவர் எனில் அவர் கற்ற கல்வியினால் என்ன பயன் இருக்கமுடியும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



