Show all

ரூ177,90,00,000க்கு ஏலம் போன ஒரு படம்! வரைந்தது: ஜப்பான் ஓவியர் யோசிடோமொ. நாடு: சீனா. ஓவியம்: ஒரு சிறுமி.

சீனாவின் ஹாங்காங் நகரில் நடை பெற்ற ஓவிய ஏலத்தில், ஜப்பான் ஓவியர் யோசிடோமொ வரைந்த ஒரு சிறுமியின் படம்; ரூ. 177.9 கோடிக்கு ஏலம் போனது. 

21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றது. இதில் ஜப்பான் ஓவியர் யோசிடோமொ வரைந்த ஒரு சிறுமியின் படம்; ரூ. 177.9 கோடிக்கு ஏலம் போனது. 

இந்த ஓவியத்தின் சிறப்பு அம்சம்: பெரிய கண்களுடன், முறைப்பது போல் நிற்கும் சிறுமியின் ஒரு கையை மறைத்து இருப்பது போல் மிகச் சிறப்பாக இந்த ஓவியம் வரையப்பட்டிருப்பதாகக் கொண்டாடப் படுகிறது. 


இந்த ஓவியத்தை சிலர் போட்டிப் போட்டுக்கொண்டு ஏலத்தை உயர்த்தினர். முடிவில் 25 மில்லியன் டாலருக்கு இந்த ஓவியம் ஏலம் போனது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 177.9 கோடியாகும். 

நியூயார்க்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஓவிய ஏலத்திலும் யோசிடோமாவின்  ஓவியம் சாதனை படைக்கும் என சிலரால் தெரிவிக்கப் படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,299.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.