Show all

டிரம்ப் கதறல்! சீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள். உலக வங்கியை நோக்கி

சீனாவிற்கு கடன் வழங்கியதற்காக சர்வதேச நிதி நிறுவனமான உலக வங்கி மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

22கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகின் இருபெரும் பொருளாதார ஆதிக்க நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வணிகஆதிக்கப்போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் எதிர்த்தரப்பினரின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பொருட்களுக்கு கடுமையான வரிகளை விதித்து மோதிக்கொண்டன. 

அதே நேரத்தில் தங்கள் வணிகஆதிக்கப் போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் அவ்வப்போது கலந்துரையாடியும் வருகின்றன. முன்னதாக ஒருமுறை, சீனாவுடனான கலந்துரையாடல்கள் முதன்மைத்துவம் வாய்ந்தவை என்றும் சீனா வணிகஆதிக்கப்;போரில் ஒப்பந்தம் ஏற்படுத்த விரும்புகிறது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆணைய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆனாலும் முற்றிலும் வணிகஆதிக்கப்;போரை முடிவுக்கு கொண்டு வரும் சுமூகமான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை. இந்நிலையில், சீனாவிற்கு கடன் வழங்குவதை உலக வங்கி நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

‘உலக வங்கி சீனாவிற்கு ஏன் கடன் வழங்க வேண்டும்? அவர்களிடம் ஏராளமான பணம் உள்ளது. அவர்களிடம் இல்லை என்றால் அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். நீங்கள் ஏன் தரவேண்டும்? கடன் வழங்குவதை நிறுத்துங்கள்’ என டிரம்ப் தனது கீச்சுப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்னும் இவர்கள் வணிகஆதிக்கப் போர் முடிவுக்கு வரவில்லையா என்று உலகநாடுகள் கேள்விக்குறியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,360.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.