Show all

என்ன பேசிக்கொள்கிறார்கள்! மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சும், நம்ம அமைச்சர் ஸ்மிருதி இரானியும்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உடன், நம்ம அமைச்சர் ஸ்மிருதி இரானி எடுத்த புகைப்படம், படவரியில் பதிவிடப்பட்டு, விருப்பங்களையும், பகிர்வுகளையும் அள்ளி வருகிறது. 

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், இந்தியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், தலைமைஅமைச்சர் மோடி உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்தார். இந்நிலையில், அமைச்சர் ஸ்மிருதி இரானி, பில்கேட்ஸ் உடன் எடுத்த புகைப்படத்தை தனது படவரி (இன்ஸ்டாகிராம்) பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்தப்படத்திற்கான விருப்பங்களும் பகிர்வுகளும் அள்ளி வரும் நிலையில் அவரவர்கள் நகைச்சுவையாக படத்திற்கான தலைப்பும், கருத்தும் எழுதி வருகிறார்கள். 

இந்தப் படத்தை வெளியிட்டு ஸ்மிருதி இரானி என்ன எழுதியிருந்தார் தெரியுமா? 'இருவரும் பட்டப்படிப்பு முடிக்கவில்லை இனி என்ன செய்வது” என்று.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,342.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.