Show all

தமிழகபாஜக! மம்தாவை தலைமைஅமைச்சராகப் பார்த்த பாஜக தலைவர் திலிப் கோஷ்; முதலில் தான் ஒரு வங்காளி என்கிற உணர்வு

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமைஅமைச்சர் ஆக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான் என்று அம்மாநில பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார். 

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அம்மாநில பா.ஜ.க தலைவர் திலிப் கோஷ் பேசியதாவது: மம்தா பானர்ஜி தலைமை அமைச்சராக நல்ல வாய்ப்புள்ளது. நாட்டின் முதல் பெங்காலி தலைமைஅமைச்சர் என்ற பெருமையை பெறவும் அவருக்கு வாய்ப்புள்ளது. அவர் தலைமைஅமைச்சர் பதவிக்கு தகுதியானவர். பெங்காலி ஒருவர் தலைமைஅமைச்சராக முடியும் என்றால், மம்தா பானர்ஜி தான் முதலிடத்தில் இருப்பார். மம்தா பானர்ஜியின் வெற்றியை பொருத்தே மேற்கு வங்கத்தின் தலைவிதி உள்ளது. ஜோதி பாசுவை முதல் பெங்காலி தலைமைஅமைச்சராக எங்களால் ஆக்க முடியவில்லை. ஏனென்றால், அவரின் கட்சி அவரை தலைமைஅமைச்சராக விடவில்லை. முதல் பெங்காலி குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெற்று விட்டார். ஆகவே, இது பெங்காலி தலைமைஅமைச்சரைத் தேர்வு செய்வதற்கான தருணம் என்றார். 

மேற்குவங்கத்தில் மம்தாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பாஜக கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் மம்தாவை தலைமைஅமைச்சர் ஆக்குவது தொடர்பாக பாஜக தலைவர் ஒருவர் பேசி, முதலில் தான் ஒரு வங்காளி என்கிற உணர்வைப் பிரதிபலித்திருக்கிறார்.

தமிழக பாஜக தொண்டர், தொண்டிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, உணர்ச்சிக் கவிஞன் காசி ஆனந்தன் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

சூடு சொரணை கொஞ்சமும் இல்லை

சொல்லடா நீயும் தமிழனின் பிள்ளை?

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே

தோரணம் ஆனது வாழை! - நீயும்

நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே

நக்கினாய் நீ ஒரு கோழை!

கூப்பிட்டுப் பதவி கொடுத்த பகைவனை

கும்பிட்டு வாய்பொத்தி நின்றாய்! - அவன்

சாப்பிட்டு மிஞ்சி எறிந்ததை அன்றோ நீ

சாக்கடை நாய்போலத் தின்றாய்!

தீயவர் தலையை திருக மறந்தாய் உன்

தேசத்தைப் பாரடா! நெருப்பு! - அட

ஆயிரம் பெருமை படைத்த உன் அன்னை மண்

அழியநீ அல்லவா பொறுப்பு?

என்றென்றும் உன்தாய் நிலத்தில் தமிழ்வானில்

இன்னொருவன் கொடி பறக்கும்! - அட

நன்றடா நன்று! இருந்துபார் உன் மண்ணில்

நாளை அவன் பிள்ளை பிறக்கும்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,024.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.