Show all

இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் யார்! இலங்கை பாதுகாப்பு படை அதிகாரிகள் தகவல்

இலங்கையில் நடந்த கொடூர வெடிகுண்டு சம்பவத்தில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் 24 பேரை இதுவரை இலங்கை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 
09,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் நடந்த கொடூர வெடிகுண்டு சம்பவத்தில், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் 24 பேரை இதுவரை இலங்கை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 
தொடர்புடைய குற்றவாளிகள் பெரும்பாலும் கொழும்பு புறநகர் பகுதியான பானுதுரா என்னுமிடத்தில் தங்கியிருந்துள்ளனர் என்று காவல்துறை செய்தி தொடர்பாளர் ரூவன் குணசேகரா கூறியுள்ளார்.
இதனிடையே குண்டுவெடிப்பு நிகழ்ந்த மின்மினி விடுதிகளுக்கு வெடிகுண்டுகளை ஏற்றிச்சென்றதாக வேன் டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் மனித வெடிகுண்டு தாக்குதல்களாகவே இருந்துள்ளன.
மேலும், கொழும்பு பண்டாரநாயகா விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் சாலையோரம் குழல் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, அது வெடிக்கும் முன்னர் செயலிழக்கச் செய்யப்பட்டதாக விமானப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த மோசமான குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ள வேன் டிரைவர் உள்ளிட்ட 24 பேரும், நேஷனல் தவ்ஹீத் ஜமா அத் என்னும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் என்று இலங்கை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,130.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.