Show all

பீலே வாழ்க்கை வரலாறு படத்தைத் பார்த்த போது, நான் மூன்றுமுறை அழுதேன்;: ஏ.ஆர்.ரஹ்மான்.

பிரேசில் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் பீலே இந்தியா வந்துள்ளார். லெஜண்ட் டூர் ஆப் இந்தியா என பெயரிடப்பட்டுள்ள, இந்தச் சுற்றுப்பயணத்தில்,  பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கொல்கத்தாவில் நேற்று பீலேவை சந்தித்தார். அதன்பின் அவர் கூறியதாவது: விளையாட்டு பற்றிய அறிவு எனக்கு துளி கூட கிடையாது. விளையாட்டுத் துறையில் கபில்தேவ் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரை மட்டுமே எனக்குத் தெரியும். பீலேவைப் பற்றி தெரியாமலேயே, அவரது வாழ்க்கை வரலாறு படத்திற்கு நான் இசை அமைத்தேன். ஆனால் அந்தப் படத்தைப் பார்த்த போது, நான் மூன்று முறை அழுதேன். இதனால் உண்மையான பீலேவை சந்திக்க வேண்டும் என விரும்பினேன்.

பீலே ஒரு அற்புதமான மனிதர். அனைவருக்கும் ஒரு நல்ல உத்வேகமாக இருப்பவர். பீலேவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு நான் இசை அமைக்கிறேன் என்று தெரிந்ததும், எனது இசையுலக நண்பர்கள் என் மீது பொறாமைப்பட்டனர். இதை எப்படி செய்கிறாய் என அவர்கள் அனைவரும் என்னிடம் கேட்டனர்.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார். இந்தப் படத்தைப் பார்த்து விட்டீர்களா? என பீலேவிடம் ரஹ்மான் கேட்டபோது, படத்தில் ஒரு சில காட்சிகளை மட்டுமே பார்த்துள்ளேன். ஆனால் இன்னும் கிளைமாக்ஸ் பார்க்கவில்லை என்றார். அக்டோபர் 23ம் தேதி, 75 வயதை எட்டும் பீலேவுக்காக, ரஹ்மான் ஜிங்கிள் ஒன்றையும் பாடினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.