Show all

முகேஷ் அம்பானிக்கு ஆசிய பணக்கார குடும்பங்களில் முதலிடம் கிட்டியதன் பின்னனிதான் என்ன

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர், முகேஷ் அம்பானியின் குடும்பம், ஆசிய பணக்கார குடும்பங்கள் பட்டியலில், முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்தாண்டுக்கான, ‘ஆசியாவின், 50 பணக்கார குடும்பங்கள்பட்டியலை, போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு உள்ளது. அதில், முகேஷ் அம்பானி குடும்பம், 4,480 கோடி டாலர் சொத்து மதிப்புடன், முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

கடந்த ஆண்டு, முதலிடத்தில் இருந்த, தென் கொரியாவின், சாம்சங் குழும தலைவர், லீ குன் ஹீ குடும்பம், 4,080 கோடி டாலருடன், இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. அடுத்த இடங்களில், ஹாங்காங்கின், க்வோக் குடும்பம், தாய்லாந்தின், செராவனன்ட் குடும்பம் ஆகியவை உள்ளன.

18 இந்திய குடும்பங்கள், இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், விப்ரோ நிறுவனர், அசீம் பிரேம்ஜியின் குடும்பம், 11வது இடத்தில் உள்ளது. இதையடுத்து, இந்துஜா 12, மிட்டல் 14, மிஸ்திரி 16 மற்றும் பிர்லா குடும்பம் 19 என்ற இடங்களைப்; பிடித்துள்ளன.

-தமிழர்கள் யாரும் இந்தப் பட்டியலில் இல்லை. ஆனால் தமிழர்கள் பலபேர்களின் பெயர் சொத்துக் குவிப்பு வழக்குப் பட்டியலில் உள்ளன. இதுதான் மோடியின் புதிய இந்தியா.

எழுந்து நின்று வணக்கம் செலுத்துவோம்!

தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,609

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.