Show all

ஹரியானாவில் 4 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க உத்தரவு

ஹரியானாவில் ஜாதிய மோதல் எதிரொலியாக தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர். இதில் 2 குழந்தைகள் பலியானார்கள். இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஹரியானா அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஹரியானாவில் உள்ள சன்பெட் எனும் கிராமத்தில், நேற்றிரவு இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி, மோதலாக மாறிய நிலையில், தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனர்.

இதில், 2 குழந்தைகள் பலியாகின. அவர்களின் பெற்றோர் பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஹரியானா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான புபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர், தாக்குதலுக்கு உள்ளான குடும்பத்தினரின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு ஹரியானா முதலமைச்சர் கட்டாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.