Show all

விஜய் மல்லையாவை உடனடியாக, இந்தியாவிற்கு நாடு கடத்த முடியாது! இலண்டன் சட்ட அமைப்பு முறை அதற்கு வாய்ப்பாய் இல்லை

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மலலையா உடனடியாக இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவது கேள்விக்குறியே. தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வரும் பணிகளை மேற்பார்வையிட நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை இணை இயக்குநர் சாய் மனோகர் தலைமையிலான குழு லண்டன் விரைந்துள்ளது. இந்த குழுவில் அமலாக்கத்துறையை சேர்ந்த இருவர் குழுவும் கூட இடம் பெற்றுள்ளது. 

இருப்பினும், லண்டன் அறங்கூற்றுமன்ற உத்தரவுக்கு எதிராக, அந்த நாட்டு உயர் அறங்கூற்றுமன்றத்தில் மல்iலா முறையீடு செய்ய முடியும். 14 நாட்களுக்குள் இவ்வாறு அவர் முறையீடு  செய்ய வேண்டும். அவ்வாறு மல்லையா முறையீடு செய்யாவிட்டால், பிரிட்டன் உள்துறை செயலாளரும் இதற்கு ஒப்புக்கொண்டால், உள்துறை செயலாளரின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 28 நாட்களில், மல்லையா இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார். 

இப்போது அறங்கூற்றுமன்றம் மட்டுமே மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரிட்டன் உள்துறை செயலாளர் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஒருவேளை மல்லையா முறையீடு செய்தால், அங்கும் அவரை நாடு கடத்த உத்தரவு பிறப்பித்தால், முறையீடு செய்யப்பட்ட அன்றிலிருந்து 28 நாட்களுக்குள் மல்லையா நாடு கடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. எனவே, மல்லையா உடனேயே இந்தியா வருவது என்பது சாத்தியம் இல்லை.

எப்போதோ கவிழ்ந்;திருக்க வேண்டிய எடப்பாடி-பன்னீர் சிறுபான்மை அரசை, அறங்கூற்றுமன்ற கால எடுப்பு நிருவாக முறை இன்னும் காப்பாற்றிக் கொண்டிருக்கிற மாதிரி, இலண்டன் அறங்கூற்று மன்ற கால எடுப்பு நிருவாக முறை, மல்லையா உடனேயே இந்தியா வருவது என்பதை சாத்தியம் இல்லாததாக்குகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,997.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.