Show all

ஒரு லட்சம் ஆண்டுகள் பயண தூரத்தில் பூமியைப் போல மூன்று கோள்கள்

பூமியைப் போல உயிர் வாழத் தகுதியுள்ள மூன்று கோள்களைக் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பெல்ஜியத்தில் உள்ள லீகோ பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சியில் உயிர் வாழத் தகுதியுள்ள 3 கோள்கள் கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளன என்று விண்வெளித் துறை விஞ்ஞானி மைக்கேல் கிலோன் கூறினார்.

     பூமியைப் போல் வாழத்தக்க திறன் கொண்ட 3 கோள்கள், 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள குள்ள நட்சத்திர அமைப்பில் சுற்றி வருவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

 

     இது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட அற்புதமான ஒன்று.

 

     3 கோள்களும் பூமியை விட இரண்டு மடங்கு அதிகமாக கதிர் வீச்சு பெறுவதால் வசிப்பதற்கு தகுதியுள்ளது என முடிவு செய்யப்பட்டது.

 

     தற்போது உள்ள தொழில்நுட்பத்தைக் கொண்டு, அந்த கோள்களுக்குச் சென்றடைய ஒரு லட்சம் ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டும் என்று விஞ்ஞானி மைக்கேல் கிலோன் கூறினார்.

 

மேலும் குள்ள நட்சத்திரம் என்று அழைக்கப்படும் நட்சத்திரங்கள், கோள்களின் மையப்பகுதியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.