Show all

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல்.

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றன. கடந்த சில வாரங்களாக அமெரிக்க படைகளின் வான் தாக்குதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதில் கடந்த 5-ந் தேதி மட்டும் சிரியா மற்றும் ஈராக்கில் 21 முறை வான்தாக்குதல்கள் நடந்தது. குறிப்பாக ஈராக்கின் பலுஜா பகுதியில் அமைந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் தளங்கள் மீது 5 முறை தாக்குதல் நடந்தது. இதில் ஒரு கட்டிடம் மற்றும் ஒரு பதுங்கு குழி என பல பகுதிகள் சேதமடைந்தன.

பின்னர் ஈராக்கின் மேலும் 6 நகரங்களில் 12 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தீவிரவாதிகளின் தாக்குதல் நிலைகள், ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராளமான வளங்கள் அழிக்கப்பட்டன. இதைப்போல சிரியாவில் உள்ள தீவிரவாத நிலைகள் மீதும் 4 முறை தாக்குதல் நடந்தது. இதிலும் கணிசமான பகுதிகள் சேதமடைந்தன.

இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக்கும் முதல் முறையாக வான்தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட எப்-16 ரக தாக்குதல் விமானங்கள் மூலம், தலைநகர் பாக்தாத் அருகே உள்ள அன்பர் மாகாணத்தில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.