Show all

இன்னல்களுக்கு உண்டாவோம்! என்பதை உணர்த்தும் முயற்சியில் ஒரு வாலிபர் ஈடுபட்டார்

எளிதாக ஐந்து நிமிடத்தில் கிடைக்கும் உணவுப் பொருட்களை சொந்தமாக தயாரிக்க எவ்வளவு இன்னல்களுக்கு உண்டாவோம்!

என்பதை உணர்த்தும் முயற்சியில் ஒரு வாலிபர் ஈடுபட்டார்.

சாண்ட்விச் தயாரிக்க எடுத்த இந்த முயற்சியில் ஒன்றும் அவ்வளவு மோசமாக ஏதும் நடக்கவில்லை! ஆயிரத்து ஐநூறு அமெரிக்க டாலரும், ஆறு மாதமும் செலவானது. ஒருமுறை போலீசார் கைது செய்தனர் அவ்ளோதான்! என்கிறார் ஜார்ஜ் கூலாக..

சாண்ட்விச்சுக்கான காய்கறிகளை தானே வளர்த்த ஜார்ஜ், கடலில் நீர் எடுத்து, அதில் சொந்தமாக உப்பு தயாரித்து, அதை கஸ்டம்ஸில் கொண்டு வர முயற்சித்தபோது, போலீசார் அதை உப்பு என நம்பாததால் கைதானார். தனது மாட்டின் பாலைக் கறந்து, அதில் வெண்ணெய், சீஸ் போன்றவற்றை தானே தயார் செய்தார்.

வௌ;ளரிக்காயை உப்பில் ஊறவைத்து ஊறுகாயாக்கி, தானே சென்று தேன்கூட்டிலிருந்து தேன் எடுத்து, கோதுமை மணிகளைக் கொண்டு தனக்கான பிரட்களை தயாரித்து, ஆசையாக வளர்த்த கோழியைக் கொன்று அதன் இறைச்சியை உபயோகப் படுத்திக்கொண்டார்.

ஒரு சாண்ட்விச்சுக்கு இவ்வளவும் செய்ய வேண்டுமா? என இதைக் கேட்ட பலரும் சப்வே-வுக்கே கிளம்புகின்றனராம்!


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.