Show all

இதயம் இல்லாதவர்களால் இதயம் பட்டபாடு! விமானத்தில் தவறவிடப் பட்ட இதயம்

29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் விமானம் ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த மனித இதயத்தால் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த விமானம் வந்த இடத்திற்கே திரும்ப அனுப்பப்பட்டுள்ளது.

பொதுவாக இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பெறப்பட்ட இதயங்களை மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் கொண்டு செல்வது மிகவும் கடினமான வேலையாகும். அப்படி ஒரு இதயம், நோயாளி ஒருவருக்காக கொண்டு செல்லப்பட்ட போது பெரிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து வாஷிங்டனில் உள்ள சியாட்டில் விமான நிலையத்திற்க்கு சவுத்வெஸ்ட் விமானம் மூலம் இதயம் ஒன்று பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த இதயம் விமானம் தரையிறங்கிய பின் சிப்;பம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்படவில்லை.

இந்த இதயம் விமானத்திலேயே இருந்துள்ளது. அதன்பின் அந்த விமானம் டெக்ஸாஸில் உள்ள டல்லாஸ் விமான நிலையத்தில் புறப்பட்டு இருக்கிறது. விமானிகளுக்கு விமானம் புறப்பட்டு பாதி தூரம் சென்ற பின்தான் தகவல் தரப்பட்டு இருக்கிறது. இதயம் ஒன்று உள்ளேயே மாட்டிக்கொண்டு இருக்கிறது என்று பின்புதான் தெரிந்துள்ளது.

இதையடுத்து விமானம் மீண்டும் சியாட்டை நோக்கி திரும்பி சென்றது. மொத்தம் 4 மணி நேரம் பயணம் செய்து விமானம் மீண்டும் சியாட் விமான நிலையத்திற்கு சென்றது. விமானத்திற்குள் இருந்த இதயம் பாதுகாப்பாக போதிய மருத்துவ முறைகளின் படி முத்திரை செய்யப்பட்டு இருந்துள்ளது.

இந்த விசயம் தெரிந்த பயணிகள் விமானத்தில் பீதிக்கு உள்ளாகினர். சிலர் இந்த சம்பவத்தை நினைத்து பரிதாபம் அடைந்தனர். விமானம் மீண்டும் சியாட்டில் விமான நிலையத்தில் தரையிறங்கிய உடன் வெகுவேகமாக விரைவுமருத்துவஉதவி வண்டி மூலம் இதயம் வெளியே கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் இந்த இதயம் சிப்பம் செய்யப்பட்டு 8-9 மணி நேரம் ஆனதால், இது செயல்படாத நிலைக்கு சென்று இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,002.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.