Show all

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது யார் என்பதை உறுதி செய்வதற்கான தேர்தல் 11 மாகாணங்களில் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், பென்னி சாண்டர்சும் போட்டியிட்டனர்.

 

இதில் டெக்சாஸ், வெர்ஜினியா உள்ளிட்ட 7 மாகாணங்களில் ஹலாரி வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளருக்கு கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும் டொனால்ட் டிரம்ப் 7 மாகாணங்களில் வென்று முன்னிலையில் உள்ளார்.

 

நாடாளுமன்ற உறுப்பினர் டெக்ரஸ் 3 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார். மார்கோ ரூபியா 1 இடத்தில் வென்றுள்ளார். ஏற்கனவே 5 மாகாணங்களில் நடைபெற்ற பிரதிநிதிகள் தேர்தலில் ஹிலாரியும்,  டிரெம்பும் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.