Show all

முகநூல் இணையதளத்தில் தவறைக் கண்டுபிடித்தவர்களுக்கு இதுவரை 4.84 கோடி

முகநூல் இணையதளத்தில் உள்ள தவறைக் கண்டுபிடித்தவர்களுக்கு இதுவரை 4.84 கோடி ரூபாயை அந்த நிறுவனம் வழங்கி இருக்கிறது. இதுவரை இதற்காக அதிகம் செலவிட்டது இந்த நிறுவனம்தான்.  ஹபக் பவுன்டி என்னும் திட்டத்தை முகநூல்; நடத்தி வருகிறது. இதில் முகநூல் நிறுவனத்தின் மென்பொருள் உள்ளிட்ட தவறுகளைக் கண்டு பிடிக்க பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பல தவறுகளைக் கண்டுபிடித்த இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு 4.84 கோடி ரூபாய் அளவுக்கு வழங்கியுள்ளது முகநூல் நிறுவனம்.

 

இந்தியாவில் 14.2 கோடி வாடிக்கையாளர்கள முகநூல் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிறுவனத்தின் ஹபக் பவுன்டி திட்டத்தில் 127 நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டனர்.  இந்தத் திட்டம் தொடங்கப் பட்டதில் இருந்து 800-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆராய்ச்சியாளர்களுக்கு 43 லட்சம் டாலர் செலவிடப்பட்டுள்ளது.

 

இந்தியா, எகிப்து மற்றும் டிரினாட் டொபாகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அதிக தொகை செலவிடப் பட்டுள்ளது.  முகநூல் பயன்படுத்துபவர்களைப் பாதுகாப்பதற்காக தான் இந்த ஹபக் பவுன்டி திட்டம் கொண்டுவரப்பட்டது என்று முகநூல்; நிறுவனம் தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.