Show all

ஐ.நா. மனித உரிமை ஆணையர் தமிழர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்

போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்துவதற்காக இலங்கை சென்றுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையர் தமிழர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இலங்கையில் இறுதி கட்ட போரின் போது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வெளிநாட்டு நீதிபதிகள் தலைமையில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பது என கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான பணிகளை ஆய்வு செய்யவும் பல்வேறு தரப்பினரை சந்தித்துப் பேசவும், 4 நாள் பயணமாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆணையர் சையத் அல் ஹுசைன் இலங்கை சென்றுள்ளார்.

 

தமிழர் பகுதியான யாழ்பாணத்திற்கு சென்ற அவர் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன், ஆளுநர் பலிகக்காரா ஆகியோரை சந்தித்து பேசினார். போரில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் முதலமைச்சரின் அலுவலகம் அருகே உருப்படங்களை எந்தியபடி நின்றனர். அப்போது வாகனத்தைவிட்டு இறங்கி சென்று அங்கிருந்த மக்களிடம் அவர் குறைகளைக் கேட்டறிந்தார். நலன்புரி நிலையத்திற்கு சென்று மக்களிடம் கலந்துரையாடிய ஐ.நா. மனித உரிமைகள் குழு ஆணையர் சையத் அல் ஹுசைன் அதிகாரிகளைச் சந்திப்பதை காட்டிலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சனைகளைக் கேட்பதில் ஆர்வமாகயிருப்பதாக கூறினார்.

 

தாம் அடுத்த முறை இலங்கை வரும் போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சொந்த வீடுகளில் இருப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தங்களது சொந்த நிலங்களை மீட்டுத்தரும் படி ஐ.நா. மனித உரிமை ஆணையரிடம் தமிழ்மக்கள் கண்ணீர் மல்க கூறினர். பின்னர் புகழ்பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு சென்று அவர் வழிப்பட்டார். அப்போது இஸ்லாமியர்களின் மில் குடியேற்றத்தை தூரிதப்படுத்த வேண்டும் என்று முஸ்லீம் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடமும் அவர் மனுக்களை பெற்றார். யாழ்ப்பாணத்தை தொடர்ந்து திரிகோண மலைக்கு அவர் சென்றார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.