Show all

தலைமைஅமைச்சர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் அறைகூவல்! பிரிவு 370க்கு காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்திட

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பை நடத்த இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் முகமது குரோஷி சவால் விடுத்துள்ளார். 

02,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதியை நீக்கிய நடுவண் அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு–காஷ்மீர், லடாக் என இரு ஒன்றியப் பகுதிகாளாகப் பிரிக்கிறது. பாகிஸ்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீனாவின் மூலமாக சர்வதேச பிரச்சினையாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் எதிர்பார்த்துபோல மற்ற நாடுகள் அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புத் தகுதியை நீக்கி, காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு–காஷ்மீர், லடாக் என இரு ஒன்றியப் பகுதிகாளாகப் பிரித்து விட்டால், பாகிஸ்தானின் தலைவலிக்கு முடிவு கட்டிவிடலாம் என்று நம்பியே இந்த நடவடிக்கையை பாஜக நடுவண் அரசு முன்னெடுத்தது.

ஆனால் பாகிஸ்தான் அறைபோட்டு சிந்தித்து, புதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. கழுத்து வலி போய் திருகு வலி வந்த கதையாக, பாஜக நடுவண் அரசு குழம்பிக் கிடக்கிறது.

ஆம்! ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை தளர்வு செய்து, அரசியல் தலைவர்களை விடுதலை செய்து, அங்கு பொதுமக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்திட இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி தயாரா? என அறைகூவல் விடுத்துள்ளார் பாகிஸ்தான் அமைச்சர்  முகமது குரோஷி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,249.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.