Show all

இந்த ஆண்டு வருமானம் 155கோடி! உலகிலேயே வலையெளி (Youtube) மூலம் அதிகம் சம்பாதித்த 7 அகவை சிறுவனார் அவர்கள்

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்வதேச அளவில், சமூக வலைதளமான, வலையொளி (Youtube) மூலம், அதிக வருமானம் ஈட்டியவர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், வெறும் பொம்மைகள் குறித்து விமர்சனம் செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த, 7 அகவை சிறுவனார் அவர்கள், ரியான் முதலிடம் பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கடந்த ஆண்டு சுமார் 70 கோடி ரூபாய் சம்பாதித்து 8வது இடத்தில் இருந்த சிறுவனார் அவர்கள் ரியான், இந்த ஆண்டு 155 கோடி ரூபாய் சம்பாதித்து, பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளார். ரியானுக்கு, 4 அகவை இருக்கும் போது, ரியான் டாய்ஸ் ரிவியூ என்ற, வலையொளி ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. இதில், சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள் குறித்து, ரியான் விமர்சனம் செய்து வருகிறார். இவர் அளிக்கும் விமர்சனம், பலரையும் கவர்ந்ததால், ஏராளமான விளையாட்டு பொருட்கள் பெரியளவில்,  விற்பனையாகின. ரேயானின் காணொளிகள் இதுவரை 2.6கோடி முறை வலையொளியில் பார்க்கப்பட்டுள்ளது. 

ரியானின் வலையொளி ஒளிபரப்புக்கு, 1.7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். ரியான் விமர்சனம் செய்து வெளியிடும், விளையாட்டு பொருட்களை விமர்சனம் செய்தது வாயிலாக மட்டும், இந்த ஆண்டு 155 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, ரயான் சாதனை படைத்துள்ளார்.

இவரைக் கவுரவிக்கும் வகையில், ரியான் வேர்ல்டு என்ற பெயரில், பொம்மைகள் மற்றும் துணிகளை விற்பனை செய்ய, வால்மார்ட் நிறுவனம், அண்மையில், ஒரு தனிப் பிரிவையே தொடங்கியுள்ளது. இதன் மூலம், அந்நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து வருவதாக வால்மார்ட் தெரிவித்து உள்ளது.

ரயானுக்கு இப்போது அகவை ஏழு மட்டுமே என்பதால், இந்தப் பணத்தை இப்போது மொத்தமாக எடுக்க முடியாது. மொத்த பணத்தில் 15 விழுக்காடு இப்போது அவருடைய வங்கி கணக்கிற்கு செல்லும். அதை அவர் வளர்ந்த பின் எடுத்துக் கொள்ள முடியும். மீதமுள்ள பணத்தை இப்போதே செலவு செய்ய முடியும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,992.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.