Show all

நேபாள அரசுக்கு எதிராக போராட்டம்.

நேபாளத்தில் புதிய அரசியல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி அங்கு 7 மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதேசி மைனரிட்டி இனத்தவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் இந்திய எல்லையோரம் வசிக்கின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேரை பிளைய்ன்ஸ் இனத்தவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இவர்கள் நேபாள அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் தற்போது வலுவடைந்து விட்டது.

பொதுவாக நேபாளம் அனைத்து விவகாரங்களிலும் இந்தியாவையே சார்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது அங்கு இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் தோன்;றியுள்ளன. எனவே இந்திய எல்லையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து நேபாளத்துக்கு உணவு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கொண்டு வரும் லாரிகள் மற்றும் வாகனங்களைப் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அதன் காரணமாக 1000-க்கும் மேற்பட்ட லாரிகள் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான சர்க்கரை, உப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் நீண்ட வரிசையில் சாலையில் நிற்கின்றன.

இதற்கிடையே நேபாளத்தில் ஒளிபரப்பாகும் 42 இந்திய டி.வி. சேனல்களை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நிறுத்தியுள்ளனர். இந்தப் போராட்டம் முடிவில்லாமல் தொடர்ந்து நடைபெறும் என கேபிள் டி.வி. சங்கம் அறிவித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபடும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் நேபாள அரசு இந்திய டி.வி. சேனல்களை ஒளிபரப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு விளக்கமும் கேட்டுள்ளது. இந்திய எல்லையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இப்பிரச்சனை விரைவில் முடிந்து நிலைமை சரியாகி விடும் என நம்புவதாக நேபாளத்துக்கான இந்திய தூதர் தீப்குமார் உபாத்யாயா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.