Show all

செறிவட்டை ஒன்றுக்கு, 28 நாட்களுக்கு வாடகை ரூ23! தொலைத் தொடர்பு நிறுவனங்களோடு தொடர்பில் இருக்க

17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாடிக்கையாளர்கள் பயன் படுத்தினாலும், பயன்படுத்தா விட்டாலும், செல்பேசியில் போடப் பட்ட ஒவ்வொரு செறிவட்டையும், தொடர்ந்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தொடர்பில் இருக்க, அந்தத் தொடர்புக்கு 28நாட்களுக்கு ஒரு முறை வாடகை செலுத்தியாக வேண்டும் என்பது உறுதியாகி விட்டது. 

அந்த வாடகை எவ்வளவு என்பதில் அன்றாடம் ஒரு அறிவிப்பை தெரிவித்துக் கொண்டிருக்கின்றன தொலைத் தொடர்பு நிறுவனங்கள். 

இந்த நிலையில், புதிதாக 23 ரூபாய்க்கு ஒரு வாடகைத் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது ஏர்டெல். இதற்கு முன்பு குறைந்தபட்ச தொகை 35 ரூபாயாக இருந்தது. இப்போது அதற்குப் பதிலாக 23 ரூபாய் 28 நாள்களுக்கு வாடகையாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் ஏற்கெனவே கணக்கில் உள்ள இருப்புத் தொகையை அப்படியே தொடர்ந்து பயன்படுத்தலாம்.

ஆனால் 28நாட்கள் முடிந்தும் இருப்பில் உள்ள தொகையில், அடுத்த மாத வாடகையாக ரூ28 பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும். அல்லது தொலைத் தொடர்பு நிறுவனங்களே, நமது கணக்கில் இருப்பு இருக்கும் வரை 28நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும், வாடகை 23 பிடித்தம் செய்து கொள்ளலாம் என்று முன் ஒப்புதல் தந்து விட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், வாடிக்கையாளர் கணக்கில் ரூஆயிரம் இருப்பு இருந்த போதும் கூட, வாடிக்கையாளர் வாடகை செலுத்தாமலோ, வாடகை செலுத்த, முன்ஒப்புதல் வழிவகை செய்யாமல் இருந்தால், வாடிக்கையாளரின் ரூ1000க்கு தொலைத் தொடர்பு நிறுவனம் பொறுப்பு இல்லை.

தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் இந்த ஆயிரத்திற்கு சின்ன பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறது. இப்படி இருப்பு இருக்கும் போது தொலை தொடர்பைத் துண்டிக்கக் கூடாது; எச்சரிக்கை செய்து பார்த்து வாடிக்கையாளர் தரப்பில் இருந்து எந்தத் தகவலும் இல்லையென்றால் துண்டித்துக் கொள்ளலாம் என்று சொல்லப் பட்டிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,990.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.