Show all

இந்தோனேஷியாவில் 7.9 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது

இந்தோனேஷியாவில் 7.9 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதால், நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சுமத்ரா தீவிற்கு மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேற்கு சுமத்ரா, வடக்கு சுமத்ரா, ஆஷ் ஆகிய பகுதிகளுக்கு முதல் கட்டமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. படாங்கில் இருந்து தென்மேற்கே 808 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டு உள்ளது.

 

இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளநிலையில், இந்தியாவிற்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவைத் தற்போது சுனாமி தாக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், நிலநடுக்கத்தினால் ஏற்படும் பாதிப்பை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.