Show all

அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ சென்ற பயணிகள் விமானம் கடத்தப்பட்டது

 

     கடத்தப்பட்ட எகிப்துஏர் விமானத்தில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியேற கடத்தல்காரர் அனுமதி அளித்து உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

 

அலெக்சாண்ட்ரியாவில் இருந்து கெய்ரோ சென்ற பயணிகள் விமானம் கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட எகிப்துஏர் விமானம் சைப்ரஸ் நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. விமானத்தில் 80 பயணிகள் இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது. இப்போது 55 பயணிகள் இருப்பதாகவும், 7 விமான பணியாளர்கள் இருப்பதாகவும் சைப்ரஸ் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. கடத்தல்காரர்கள் காலை 8:30 மணியளவில் லார்னாகா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உள்ளனர், இதனையடுத்து விமானம் தரையிறங்க அனுமதி 8:50க்கு அளிக்கப்பட்டு உள்ளது.

 

விமானத்தை கடத்தியவர் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், விமானம் அருகே பாதுகாப்பு படையினர் யாரும் வரக்கூடாது என்றும் நிபந்தனை விதித்து உள்ளார்.

 

விமானத்தை வெடிக்க செய்துவிடுவதாக மிரட்டினார் என்று எகிப்து விமான போக்குவரத்தகம் தகவல் தெரிவித்தது.

 

இதற்கிடையே விமானத்தில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை வெளியேற அனுமதிப்பதாக கடத்தல்காரர் ஒப்புக் கொண்டதாக சைப்ரஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். விமான ஓட்டியை தற்கொலை வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி கடத்தல்காரர் மிரட்டிஉள்ளார், இதனையடுத்து விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு சம்பவம் தொடர்பாக விளக்கிஉள்ளார் என்று விமானநிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானத்தை காவல் மற்றும் ராணுவ வாகனங்கள் அணுக கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

 

கடத்தப்பட்ட விமானம் தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்படவில்லை. விமான நிலையம் மூடப்பட்டது.

 

எகிப்து மீடியாக்களின் தகவலின்படி சுமார் 10 அமெரிக்கர்கள் இருப்பதாகவும், பிரிட்டனை சேர்ந்த 8 பேர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

இதற்கிடையே கடத்தல்காரர் 30 பயணிகளை வெளியேற அனுமதித்து உள்ளதாகவும் சைப்ரஸ் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

 

விமான பணியாளர்கள் மற்றும் 5 வெளிநாட்டு பயணிகள் தவிர மற்றவர்களை விடுவித்துவிடுவதாக கூறிஉள்ளார் என்று எகிப்துஏர் தெரிவித்து உள்ளது. கடத்தல்காரர் இப்ராகிம் ஷமாகா என்று அடையாளம் காணப்பட்டு உள்ளார் என்று எகிப்து மீடியா தெரிவித்து உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.