Show all

ஆடு நனைவதைப் பார்த்து அழுததாம் ஓநாய்

குழப்பத்தை ஏற்படுத்தும் வைகோவை கூட்டணியில் இருந்து விஜயகாந்த் வெளியேற்ற வேண்டும் என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா வலியுறுத்தினார்.

சென்னை தியாகராய நகர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக தேசியச் செயலர் எச்.ராஜாவுக்காக, வட பழனி 100 அடி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தை மேலிடப் பார்வையாளர் முரளிதரராவ் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.

இதைத் தொடர்ந்து, எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:-

                மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் 20 சதவீத வாக்குகள் கிடைத்தன. அது மோடி தலைமையை விரும்பி மக்கள் அளித்த வாக்குகள். இந்தத் தேர்தலிலும் அவரது சாதனைகள் அடித்தட்டு மக்களைச் சென்றடைந்துள்ளன. அவற்றைச் சொல்லி வாக்கு கேட்போம். தமிழகத்தில் 3-ஆவது பெரிய கட்சி பாஜக என்பதை நிரூபிப்போம்.

தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும். ஏப்ரல் முதல் வாரத்தில் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

தேமுதிகவுடன் பேரம் பேசப்பட்டதாக கூறி மதிமுக பொதுச்செயலர் வைகோ தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா எந்தப் பேரமும் நடக்கவில்லை என்று தெளிவாக பதில் சொல்லிவிட்டார். இதையடுத்து, வைகோ மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில், பொய்யான தகவல்களைக் கூறும் வைகோவை கூட்டணியில் இருக்கக் கூடாது என்று விஜயகாந்த் கூற வேண்டும்.

வைகோ குழப்பவாதி. அதனால் இவர்களின் கூட்டணியால் தமிழகத்துக்கு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.