Show all

அகதிகளை ஏற்றுக்கொள்வதாக ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

சிரியாவிலிருந்து வரும், அகதிகளை ஏற்றுக்கொள்வதாக ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு பேருந்துகளில் அகதிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். படகு விபத்தில் உயிரிழந்து, துருக்கியக் கடற்கரையில் ஒதுங்கிய 3 வயது அகதிச் சிறுவனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் புதன்கிழமையன்று வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அகதிகள் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என ஐரோப்பிய நாடுகளை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தத் தொடங்கினர். இந்நிலையில், ஸ்விட்சர்லாந்து சென்றுள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் அகதிகள் பகிர்வு ஒப்பந்தம் உடனடியாகக் கையெழுத்தாக வேண்டியது அவசியம் என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.