Show all

வாட்ஸ் ஆப், ஜி மெயில் வாடிக்கையாளர் எண்ணிக்கை நூறுகோடியைத் தாண்டியது

மொபைல் போன் மெசேஜிங் அப்ளிகேஷன், வாட்ஸ் ஆப் நேற்று, புதிய சாதனை படைத்தது. உலகம் முழுவதும், 100 கோடி பேர் அந்த, பயன்பாட்டை பயன்படுத்துவதாக அறிவித்தது. அதிலும், கடந்த, ஐந்து மாதங்களில் மட்டும், 10 கோடி பேர் புதிதாக அந்தப் பயன்பாட்டை பயன்படுத்தி உள்ளனர் என, வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது

 

     இப்போது வந்த வாட்ஸ் ஆப்புக்கு, எங்களின், ஜி மெயில் ஒன்றும் சளைத்ததில்லை என கூறும் வகையில், கூகுள் இணையதளத்தின் மெயிலான, ஜி மெயிலும், 100 கோடி பயனாளர்களைதக் கொண்டுஉள்ளதாக அறிவித்துள்ளது

     மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் மற்றும் கம்ப்யூட்டர் மென்பொருள், சேவை நிறுவனம், தன் தகவல் தொகுப்பு மையத்தை, கடலுக்கு அடியில் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே, அமெரிக்கா மற்றும் உலகின் பல இடங்களில் தகவல் தொகுப்பு மையங்களை அமைத்துள்ள மைக்ரோசாப்ட், அமெரிக்காவின் ஒரு இடத்தில், பசிபிக் கடலின் அடியில், தகவல் தொகுப்பு மையத்தை அமைத்து வருவதாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன், முகநூல் நிறுவனத்தின் ஒரு அங்கம்; கூகுள் தேடுதல் இணையதளம் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய மூன்று நிறுவனங்களும், அமெரிக்காவின் பிரம்மாண்டமான கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்கள்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.