Show all

சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல்.

இலங்கை போர் குற்ற விவகாரத்தில் சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை உள்நாட்டுப் போரில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஈடுபட்டனர்.

முன்னாள் எம்எல்ஏ கற்பூரம் முன்னிலையில் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பங்கேற்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மூன்றாவது நடை மேடையில் மங்களூருக்கு செல்ல வேண்டிய ரயிலை மறித்து இப்போராட்டம் நடத்தப்பட்டது. சுமார் 100 தமிழக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழக காவல்துறை,பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து அவர்களைக் கைது செய்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.