Show all

பணிந்தது பிரான்ஸ் அரசு! எரிபொருள் மீதான வரி உயர்வால் அதிர்ந்த போராட்டங்கள்

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரான்ஸ் நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக வலுத்த போராட்டங்களால் எரிபொருள் மீதான வரி உயர்வை நீக்கியதாக அந்நாட்டு தலைமை அமைச்சர் அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் மீதான வரி விதிப்பு உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து அந்நாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர். இந்தப் போராட்டங்கள் வலுவடைந்து வன்முறையாக வெடித்தது. இதையடுத்து நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தும் சூழல் ஏற்பட்டது.

ஆலோசனைக் கூட்டங்கள், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை எனப் பலவாறு யோசித்த பிரான்ஸ் அரசு தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. எரிபொருள்கள் மீதான வரி உயர்வு உத்தரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக பிரான்ஸ் தலைமை அமைச்சர் எட்வர்டு ப்ளிப் அறிவித்துள்ளார்.

முன்னதாக பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் விலை 1.42 யூரோக்கள் இருந்தது. வரி உயர்வு விதிக்கப்பட்டதால் விலை 4 யூரோக்கள் ஆக அதிகரித்தது. இந்த விலை உயர்வைக் கண்டித்து பிரான்ஸில் கடந்த இருபது நாட்களுக்கு முன்பு தொடங்கிய போராட்டத்தில் தற்போது முடிவு ஏற்பட்டுள்ளது. இந்தப் போராட்ட காலத்தில் மட்டும் மூன்று பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

போராட்டங்களுக்கு மதிப்பளித்து, வரிவிதிப்பை திரும்பப் பெற்ற பிரான்ஸ் அரசை பாராட்டுவோம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,992.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.