Show all

முகநூலில் கருத்து பதிவிட்டமைக்காக செவிலிப் பெண்ணிற்கு நான்கு மாதம் சிறை தண்டனை.

சி ங்கப்பூரில் அந்நாட்டை விமர்சனம் செய்து முகநூலில் கருத்து பதிவிட்டமைக்காக செவிலிப் பெண்ணிற்கு நான்கு மாதம் சிறை தண்டனை அந்நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த எல்லோ எட் முண்ட்சல் பெலோ (28) என்ற செவிலி பெண் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில்,

“சிங்கப்பூர் குடிமக்கள் தங்கள் சொந்த நாட்டை இழந்துவிட்டார்கள். சிங்கப்பூர் விரைவில் ’சிறிய பிலிப்பைன்ஸாக மாறிவிடும்”

என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார்.

இதனால் அந்த பெண்ணின் மீது தேசத்துரோகம் இழைத்தது மற்றும் காவல்துறையிடம் பொய் கூறியது ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த தண்டனையின் நியாயத்தை விளக்கிய நீதிபதி, சமூக ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலான கருத்துக்களை நீதிமன்றம் புறந்தள்ள முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இதனை அந்த பெண் மறுத்துள்ளர். வேறு யாரோ இந்தப் பதிவினை தனது அனுமதியில்லாமல், தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் நாடு சர்ச்சைக்குறிய முகநூல் கருத்துக்களுக்காக சிறைத் தண்டனை விதிப்பதை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.