Show all

விலை! மடக்கக்கூடிய மிடுக்குப்பேசியான கேலக்ஸி எப், இன்று இரவு 11.30 மணிக்கு சான்பிரான்சிஸ்கோவில் சாம்சங் நிறுவனம் அறிமுகம்

22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாம்சங் நிறுவனத்தின் மடக்கக்கூடிய மிடுக்குப்பேசியான கேலக்ஸி எப் இன்று இரவு 11.30 மணிக்கு சான்பிரான்சிஸ்கோவில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த அதிரடி மாதிரி செல்பேசியான கேலக்ஸி எப், இன்று சான்பிரான்சிஸ்கோநகரில் சாம்சங் நிறுவன மாநாட்டில் வெளியாக உள்ளது. இந்த நிகழ்வானது சாம்சங் நிறுவனத்தின் அதிர்காரபூர்வ வலையொளியில் நேரடி நிகழ்ச்சியா ஒளிபரப்பாக உள்ளது. 

இது மடக்கப்பட்ட நிலையில் 4.58 அங்குல மிடுக்குப்பேசியாகவும், திறந்த நிலையில் 7.3 கையடக்க கணினி  போன்றும் இயங்கும். 

இதனால் புதிய மடக்கக்கூடிய சாதனத்தை மிடுக்குப்பேசி அல்லது கையடக்கக் கணினி என இருவிதங்களில் பயன்படுத்த முடியும். இந்த சாதனத்தின் உற்பத்தி தொடங்கி விட்டதாகக்  கூறப்படுகிறது . முதற்கட்டமாக ஆண்டிற்கு ஐந்து முதல் பத்து லட்சம் அலகுகளை உற்பத்தி செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளது. 

இரண்டு செறிவட்டைகள் போடும் வசதி, மற்றும் 512 ஜிபி சாதனச் சேமிப்பகம் கொண்டது. இதன் விலை தோராயமாக ரூ. 1,09,432 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 


-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,965.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.