Show all

மூத்த தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதையும் கூறவில்லை: வெங்கையா நாயுடு

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்து அத்வாணி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் வெளிப்படையாக விமர்சித்தற்கு பதிலாக கட்சி கூட்டத்தில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்க வேண்டும் என்று நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

கட்சியின் வளர்ச்சிக்காக அத்வாணி போன்ற தலைவர்கள் மிகப்பெரிய பங்காற்றியுள்ளதாக தெரிவித்த வெங்கையா நாயுடு மூத்த தலைவர்களின் கருத்துக்களை கட்சி கருத்தில் கொள்ளும் என்று கூறினார்.

மூத்த தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதையும் கூறவில்லை என்று குறிப்பிட்ட வெங்கையா நாயுடு உட்கட்சி விஷயங்களை ஊடகங்களில் தெரிவிப்பது சரியல்ல என்றும் தெரிவித்தார்.

பீகார் தேர்தல் தோல்வியை அடுத்து கட்சியில் ஓரம் கட்டப்பட்டுள்ள அத்வாணி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த சின்ஹா, சாந்தகுமார் போன்ற தலைவர்கள் மோடி மற்றும் அமித் ஷாவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டனர். கட்சி வெற்றியடைந்தால் அதற்கு மார்தட்டி கொள்பவர்கள் தோல்விக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.