Show all

இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடு பிரிட்டன்: பிரிட்டன் பிரதமர் கேமரூன்

வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் இந்தியா - பிரிட்டன் இணைந்து பணியாற்ற வேண்டும் என மோடி, கேமரூன் கூட்டாக பேட்டியளித்தனர்.

இந்தியாவில் அதிக முதலீடு செய்துள்ள நாடு பிரிட்டன் என்று பிரிட்டன் பிரதமர் கேமரூன் தெரிவித்தார்.

இந்தியாவில் ரூ.90 ஆயிரம் கோடி முதலீட்டு திட்டங்கள் தொடர்பாக மோடியுடம் கேமரூன் விவாதம் நடத்தி வருகிறார்.

இங்கிலாந்தில் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்ட இந்தியாவுக்கு அனுமதி அளிப்பதாக கேமரூன் தெரிவித்தார். பிரிட்டிஷ் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதும் எமது விருப்பம் என்றும்,

இந்திய - இங்கிலாந்து ஒத்துழைப்புக்கு இன்னும் ஏராளமான வாய்ப்புள்ளது என்றும் கேமரூன் தெரிவித்தார்.

இங்கிலாந்துடன் நெருங்கிய உறவை பேணுவது இந்தியாவுக்கு முக்கியமானது என லண்டனில் கேமரூனுடன் செய்தியாளரை சந்தித்த பிரதமர் மோடி தெரிவித்தார். இங்கிலாந்துடன் ஆழமான வர்த்தக உறவுகளைப் பேண இந்தியா விரும்புவதாகவும், ஆக்கப்பூர்வ அணுசக்தி திட்டம் தொடர்பாக இங்கிலாந்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

பாதுகாப்பு, தொழில் முதலீடு, தூய்மையான எரிசக்தி துறையிலும் இங்கிலாந்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்தார். இந்திய ரயில்வே மேம்பாட்டுக்கு நிதி திரட்ட பிரிட்டனில் பத்திரம் வெளியிட முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்

புத்தர், காந்தி போன்றோர் பிறந்த நாடு இந்தியா என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியா ஒரு ஜனநாயாக நாடு, பேச்சுரிமை அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அனைத்து விதமான கருத்துக்களுக்கும் இந்தியாவில் இடமுண்டு எனவும் மோடி உறுதி தெரிவித்தார். இந்தியாவில் கருத்துக்களை முடக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் மோடி தெரிவித்தார்.

இந்தியாவில் பெரும் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றவர் நரேந்திர மோடி என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார். மோடியுடன் இணைந்து பணியாற்றி இருதரப்பு உறவை மேம்படுத்த விரும்புவதாகவும் கேமரூன் தெரிவித்தார்.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.