Show all

சனி கிரகத்தை ஆய்வு செய்ய, நாசா அனுப்பி வைத்த கேசினி விண்கலம்

சனி கிரகத்தைச் சுற்றி வரும் பல நிலவுகளில் என்சிலடுஸ் எனும் நிலவில் கடல் இருந்தது தெரியவந்துள்ளது என்று அமெரிக்க  விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தெரிவித்துள்ளது.

சனி கிரகத்தை ஆய்வு செய்ய, கேசினி விண்கலத்தை நாசா அனுப்பி வைத்தது. தனது  பயணத்தில், சனி கிரகத்தின் என்சிலடுஸ் நிலாவின் வடக்குப் பகுதிக்கு ஆயிரம் மைல் தொலைவில் இருந்தபோது, அப்பகுதியை கேசினி படம்  எடுத்து அனுப்பியது.

படத்தில் காணப்பட்ட வரிகளும், பள்ளங்களும், பூமியைச் சுற்றி வரும் நிலவில் இருக்கும் வரிகள், பள்ளங்களுக்கு இணையாக  உள்ளது.

மேலும் கேசினி அனுப்பியுள்ள படத்தை நுணுக்கமாக ஆராய்ந்ததில், அங்கு ஏற்கனவே கடல் இருந்தது தெரிய வந்துள்ளது.

எனவே, அங்கு உயிரினங்கள் இருந்திருக்கலாம். எனினும், இதுபற்றி உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது. விண்வெளி விந்தைகளைத் தீர்த்து  வைக்க ஆர்வம் காட்டி வருகிறோம். அடுத்த இரண்டு வாரங்களில், என்சிலடுஸ் நிலவை கேசினி வெகு அருகில் நெருங்கும். அப்போது அனுப்பி  வைக்கும் படங்களில் மேலும் பல ஆச்சர்யங்கள் வெளிப்படும் என்று நம்புகிறோம் என கார்னெல் பல்கலைக்கழகத்தில் உள்ள கேசினி திட்டத்தில்  பணியாற்றும் பால் ஹெல்பென்ஸ்டீய்ன் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.