Show all

மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பின் உன்னத இடத்தில் ஒரு தமிழர்! ஆம் இருநாட்டுத் தலைவர்களின் உரையாடல் ஒருங்கிணைப்பில்.

உலகின் அறிவார்ந்த தளங்களில் எல்லாம் ஒற்றைத் தமிழராவது நிற்கதான் செய்கிறார். உலகின் முதன்மைத் தேடல்தளமான கூகுளில் சுந்தர் பிச்சை. இந்திய வான்வெளி ஆய்வு மையத்தில் அப்துல்காலம், மயில்சாமி அண்ணாதுரை, இன்று கே.சிவன். இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் தொடர்ந்து வந்து விடுகிறார் சிவநாடார். இப்படி நீளும் பட்டியலில்- இப்போது, இங்கே  மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பின் உன்னத இடத்தில் ஒரு தமிழர்!   

25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்தியத்தலைமைஅமைச்சர் மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் சிற்பங்களை இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பார்வையிட்டனர். இந்தச் சந்திப்பின்போது மோடி மற்றும் சீன அதிபருடன் கூடுதலாக இரண்டு பேர் மட்டுமே உடனிருந்தனர்.

அந்த உன்னத இடத்தில் இருந்த இருவரில், இன்னொருவர் சீனர். ஒருவர்தான் அந்த உன்னத  தமிழர், மது சுதன் ரவீந்திரன் எனும் இந்திய அதிகாரி. அவர், இரு தலைவர்களுக்குமான மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.

தற்போது, சீனாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலராக இருக்கும் மது சுதனுக்கு, சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரின் உள்பட பல மொழிகள் நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மோடி – ஜின்பிங் சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அங்கும் உடனிருந்தார் மது சுதன். 

மதுசூதனன் தலைமைஅமைச்சர் மோடி மற்றும் சீன அதிபரின் உரையைக் கூர்ந்து கவனித்து, அவர்களுக்கு மொழிபெயர்ப்பு செய்யும் நடவடிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும் மதுசூதனன் தமிழர் என்பதால் தமிழக பாரம்பரியத்தை எடுத்துரைப்பது அவருக்கு எளிதாகவும் அமைந்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,303.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.