Show all

தமிழ்மெய்யியல்! அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டிய வாய்ப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் வேலைக்காக விண்ணப்பித்ததன் மூலம், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்! தமிழ் மெய்யியலில், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது, 
உரை சால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது,
ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும், 
என்பன மூன்று அடிப்படை விதிகளாக சிலப்பதிகாரம் தெளிவு படுத்தியிருக்கும். அதில் மூன்றாவது விதி, அமெரிக்கவில் இந்த வியப்பான செய்தியால் நிரூபனம் ஆகியுள்ளது.  

06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் மெய்யியலில், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது, 
உரை சால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது,
ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும், 
என்பன மூன்று அடிப்படை விதிகளாக சிலப்பதிகாரம் தெளிவு படுத்தியிருக்கும். அதில் மூன்றாவது விதி, அமெரிக்கவில் ஒரு வியப்பான செய்தியால் நிரூபனம் ஆகியுள்ளது.  

அமெரிக்காவில் வேலைக்காக விண்ணப்பித்ததன் மூலம், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா நகரில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு சோண்ட்ரா பேட்டர் எனும் 68 அகவை மூதாட்டி கடை ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இந்தக் கொலைக்குக் காரணமானவர் குறித்து காவல் துறையினர் பல கோணங்களில் விசாரித்தும் கண்டறிய முடியவில்லை.

பேட்டர் இறப்பதற்கு முன் ஒருவர் கடைக்கு வந்து சென்றது மட்டும் கண்டறியப்பட்டது. கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த இரத்த மாதிரிகள், கை ரேகைகள் அனைத்தும் இருந்தும் கொலை செய்த நபரின் முக அடையாளங்கள் ஏதும் தெரிய வராததால், காவல்துறையினர் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை.

20 ஆண்டுகள் மர்மமாக இருந்த இந்த வழக்கில், அண்மையில் குற்றவாளி கண்டறியப்பட்டுள்ளார். பார்கட் எனும் 51 அகவை நபர் மருத்துவமனையில் செவிலியர் பணிக்காக விண்ணப்பித்தார். அவருக்கு வேலை கிடைக்கவே, அவரது கை ரேகைகள், மற்ற ஆவணங்களை மருத்துவமனை நிர்வாகம் அனுப்பச் சொல்லியுள்ளது.

இந்த கை ரேகைகள் பேட்டர் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த கை ரேகையுடன் ஒத்து போயுள்ளது. இதனையடுத்து பேட்டர் கொலை செய்யப்பட்ட கடையில் இருந்த டிஎன்ஏ மாதிரிகளை வைத்து, பார்கட்டின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அதுவும் ஒத்துப் போகவே, பார்கட்டை காவல் துறையினர் உடனடியாக கைது செய்து விசாரித்தனர். அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பின்  ஒரு வேலைக்கான விண்ணப்பம் வழியாக ஊழ்வினை உருத்து வந்து ஊட்டியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகும் குற்றவாளி கைதுக்கான வாய்ப்பு அமையப் பெற்றது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,253.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.