Show all

தூத்துக்குடியில் ஆசிரியையை வெட்டிக்கொலை செய்துவிட்டு வாலிபர் தற்கொலை

தூத்துக்குடியில் ஒருதலைக்காதலில் ஆசிரியையை வெட்டிக்கொலை செய்துவிட்டு, காவல்துறைக்குப் பயந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி கீழசண்முகபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் நியுமென். இவரது மகள் பிரான்சினா (அகவை24). இவர் அதே பகுதியில் உள்ள தூயபேதுரு மழலையர் ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு பிரான்சினா நடந்து செல்வது வழக்கம். அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் சீகன் ஜெனிஸ்டன் (24). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் தனியார் நிறுவன கிரேன் இயக்கியாக வேலை பார்த்து வந்துள்ளார். சீகன் ஜெனிஸ்டன், ஆசிரியை பிரான்சினாவை கடந்த 2ஆண்டுகாளாக ஒரு தலையாக காதலித்துள்ளார். இதனால் தினமும் பள்ளிக்கு செல்லும் பிரான்சினாவை அவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். பள்ளி வளாகத்தில் உள்ள ஆலயத்தில் தினமும் பிரார்த்தனை செய்த பின்னர் பிரான்சினா பள்ளிக்கு செல்வார். அதுவரை சீகன் ஆலயத்தின் வெளியே காத்திருப்பாராம். இந்நிலையில் ஆசிரியை பிரான்சினாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். சமீபத்தில் அவரது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அவருக்கு வருகிற 8ந் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதனால் ஆசிரியை வேலையை விட்டுவிட பிரான்சினா முடிவு செய்தார். இதையடுத்து இன்றுடன் ஆசிரியை வேலையில் இருந்து நின்றுவிடப் போவதாக அவர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். பிரான்சினாவிற்கு வருகிற 8ந் தேதி திருணம் நடக்க இருப்பதையும், அவர் வேலையில் இருந்து இன்றுடன் நிற்க போவதையும் அறிந்த சீகன்ஜெனிஸ்டன் ஆத்திரம் அடைந்தார். தனக்கு கிடைக்காத அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதையடுத்து இன்று காலை அரிவாளை தனது சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு பள்ளி அருகே சீகன்ஜெனிஸ்டன் காத்திருந்தார். வழக்கம் போல் பள்ளிக்கு வந்த பிரான்சினா பள்ளி வளாகத்தில் உள்ள ஆலயத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது உள்ளே புகுந்த சீகன் ஜெனிஸ்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் பிரான்சினாவின் தலை, கழுத்து ஆகிய இடங்களில் வெட்டு விழுந்தது. அவர் அலறி துடித்தபடி கீழே விழுந்தார். உடனே சீகன் அங்கிருந்து தப்பி ஓடினார். பிரான்சினாவின் அலறல் சத்தம் கேட்டு பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் ஓடிவந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரான்சினாவை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியை பிரான்சினா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சீகன் ஜெனிஸ்டனைத் தேடினர். அப்போது தூத்துக்குடி மணல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பிரான்சினாவை அரிவாளால் வெட்டிய சீகன்ஜெனிஸ்டன் தன்னை எப்படியும் காவல்துறையினர் பிடித்து விடுவார்கள் என நினைத்துள்ளார். அதனால் அவர் தூத்துக்குடி மணல் தெருவில் தான் முன்பு வாடகைக்கு இருந்த வீட்டிற்கு சென்றுள்ளார். காலியாக உள்ள அந்த வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற அவர் அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் காதலித்த பெண்ணை வெட்டி கொலை செய்து விட்டு காவல்துறைக்குப்யு பயந்து வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.