Show all

ஜப்பானைத் தாக்கியது குரோசா புயல்! ஆறு லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப் பட்டதாக தகவல்.

ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹோன்சு தீவில் கிரோசிமா நகருக்கு அருகே உள்ள குரோ நகரில் பலத்த புயல் காற்று தாக்கியது. இதற்கு குரோசா என பெயரிடப்பட்டு உள்ளது. மணிக்கு 144 கி.மீ. வேகத்தில் வீசியதுடன் இடைவிடாத மழையும் பெய்தது.

31,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜப்பானை புயல் தாக்கியதை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து 6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவறுத்தப்பட்டனர். இந்த புயலுக்கு குரோசா என்று பெயரிடப் பட்டுள்ளது.

ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹோன்சு தீவில் கிரோசிமா நகருக்கு அருகே உள்ள குரோ நகரில் பலத்த புயல் காற்று தாக்கியது. இதற்கு குரோசா என பெயரிடப்பட்டு உள்ளது. மணிக்கு 144 கி.மீ. வேகத்தில் வீசியதுடன் இடைவிடாத மழையும் பெய்தது.

மரங்கள், மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிலஇடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,246.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.