Show all

இடைக்காலத் தடை விதித்தது இலங்கை அறங்கூற்று மன்றம்! சிறிசேனா பாரளுமன்றக் கலைப்பு உத்தரவுக்கு

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்;கை அதிபர் மைத்திரிபால சிறசேனாவால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து உயர் அறங்டுகூற்றுமன்றத்தில் 13 அடிப்படை உரிமை மனுக்கள் பதிகை செய்யப்பட்டன. இலங்;கை அதிபர் தீர்மானம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதெனக் கூறி, 10க்கும் மேற்பட்ட மனுக்கள் பதிகை செய்யப்பட்டன.

இலங்;கை அதிபரால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து பதிகை செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிக்காது தள்ளுபடி செய்யுமாறு, அரசு தரப்;பு வழக்கறிஞர் ஜயந்த ஜயசூரிய, இன்று  உயர் அறங்கூற்றுமன்றில் கோரினார்.

தலைமை அறங்கூற்றுவர் நளின் பெரேரா, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய மூவர் கொண்ட உயர் அறங்கூற்றுமன்ற, அறங்கூற்றுவர்கள் குழு முன்னிலையில் இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தன.

இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டபோது அறங்கூற்றுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அடிப்படை உரிமை மனுக்களை 17,18,19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120 (04,05,06.12.2018) நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் அறங்கூற்று மன்றம் அறிவித்துள்ளது.

மேலும், அறங்கூற்றுமன்றம் அதிபரின் பாராளுமன்றக் கலைப்பு உத்தரவிற்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,970. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.